தூரமாகுமோ நட்பு?
July 22, 2013
தொலைதூரம் விட்டுப் போனாலும்
துரத்தி வருமே வெண்ணிலவு!
ஓடியோடி ஒழிந்தாலும் ஓயாமல்
உற்றிடுமே ஓவியக் கண்கள்!
இருளெனில் தன்னுயிர் விட்டு
இறக்கும்வரை இறக்காதே நிழல்!
அழுகையில் கண்ணீர் விட்டு
சிரிக்கையில் பல்காட்டுமே கண்ணாடி!
விட்டுப் பிரிந்த வேதனையில்
விடாமல் தொடருமே காலடித்தடம்!
வெகுகாலம் கடந்தாலும், நினைக்கையில்
வருடங்களைப் பின்வாங்குமே கடிகாரம்!
கடிகாரத்தின் காலடித் தடமும்
கண்ணாடியின் ஓவியக் கண்களும்
நிலவின் நிழலுமாகிய நட்புதான்
தூரமாகுமோ தூரம் போவதால்?